மாவட்ட செய்திகள்

திருச்செந்தூர் அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலைமறியல்

திருச்செந்தூர் அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலைமறியல்

திருச்செந்தூர்,

திருச்செந்தூரை அடுத்த கீழ நாலுமூலைக்கிணறு கிராமத்துக்கு எல்லப்பநாயக்கன்குளத்தில் இருந்து ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 3 மாதங்களாக கீழ நாலுமூலைக்கிணறில் சீராக குடிநீர் வினியோகம் செய்யவில்லை என்று கூறி, அப்பகுதி மக்கள் நேற்று காலையில் கீழ நாலுமூலைக்கிணறு மெயின் ரோட்டில் அமர்ந்து திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு தீபு, கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷீஜாராணி, யூனியன் ஆணையாளர் கருப்பசாமி மற்றும் அதிகாரிகள் விரைந்து சென்று, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உடனே குடிநீர் வினியோகம் செய்வதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு