மாவட்ட செய்திகள்

அடித்து துன்புறுத்துவதாக மனைவி புகார்: போலீசுக்கு பயந்து வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

ஸ்ரீபெரும்புதூர் அருகே அடித்து துன்புறுத்துவதாக மனைவி புகார் அளித்ததால் போலீஸ் விசாரணைக்கு பயந்து வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தினத்தந்தி

ஸ்ரீபெரும்புதூர்,

ஸ்ரீபெரும்புதூரை அடுத்த கன்னதாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 27). இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் உறவினர் உமா (22) என்பவருக்கும் 2016-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணம் ஆன 3 மாதத்தில் கணவன், மனைவிக்க இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதில் இருவருக்கும் 3 மாதத்தில் திருமண வாழ்க்கை கசந்தது. இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

இந்த நிலையில் பிரகாஷ் அடிக்கடி உமா வீட்டுக்கு சென்று தகராறு செய்து அவரை அடித்து உதைத்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் மீண்டும் நேற்று உமா வீட்டுக்கு சென்று பிரகாஷ் தகராறு செய்து உமாவை அடித்ததாக தெரிகிறது.

இதுகுறித்து உமா ஸ்ரீபெரும்புதூர் மகளிர் போலீசில் புகார் அளித்தார். இதுபற்றி தகவல் அறிந்த பிரகாஷ், போலீஸ் விசாரணைக்கு பயந்து வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிரகாஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பதிரியிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு