மாவட்ட செய்திகள்

விபத்தில் சிக்கி பெண் பலி நடிகர் கைது

மகனின் திருமண அழைப்பிதழை உறவினர்களுக்கு கொடுக்க சென்ற பெண் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திய நடிகர் கைது செய்யப்பட்டார்.

மும்பை,

சிந்துதுர்க் மாவட்டத்தில் உள்ள சாவந்த்வாடியை சேர்ந்தவர் பிரதிபா (வயது65). இவர் தனது மகன் திருமணத்தையொட்டி உறவினர்களுக்கு அழைப்பிதழ் கொடுப்பதற்காக மும்பை வந்திருந்தார்.

நேற்றுமுன்தினம் காலை மும்பையில் நடந்த தனது சகோதரியின் மகன் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு பின்னர் போரிவிலி மேற்கில் உள்ள தனது உறவினர்களுக்கு மகனின் திருமண அழைப்பிதழை கொடுப்பதற்காக ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார்.

அவருடன் உறவினர்கள் ஜான்வி, நர்மதா ஆகிய இரண்டு பேர் இருந்தனர். ஆட்டோ சித்தார்த் நகர் சாப்லே சாலையில் சென்று கொண்டிருந்த போது, வேகமாக வந்த கார் ஒன்று ஆட்டோ மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் பிரதிபா பரிதாபமாக உயிரிழந்தார்.

நர்மதாவும், ஆட்டோ டிரைவரும் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். ஜான்வி லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.

விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவரை அக்கம்பக்கத்தினர் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் அவர் கோரேகாவை சேர்ந்த ராகேஷ் ரஞ்சன் (வயது32) என்பதும், நடிகர் என்பதும் தெரியவந்தது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு