மாவட்ட செய்திகள்

பள்ளிபாளையத்தில் பாத்திர கடையில் ரூ.1 லட்சம் திருட்டு

பள்ளிபாளையத்தில் பாத்திர கடையில் ரூ.1 லட்சம் திருடப்பட்டது.

பள்ளிபாளையம்:

ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி. இவர் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் திருச்செங்கோடு சாலையில் கடந்த 2 ஆண்டுகளாக பாத்திரக்கடை நடத்தி வருகிறார். கடந்த 12-ந் தேதி கருப்பசாமி கடையை பூட்டி விட்டு சென்றார். பின்னர் மறுநாள் காலை வந்தபோது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. மேலும் கல்லாவில் வைத்திருந்த ரூ.1 லட்சம் திருடப்பட்டிருந்தது. இதுகுறித்து அவர் பள்ளிபாளையம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், கடையில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் இரவில் கடையின் பூட்டை உடைத்து மர்ம நபர் ஒருவர் உள்ளே செல்வதும், பின்னர் கல்லாவில் வைத்திருந்த ரூ.1 லட்சத்தை திருடி சென்றதும் பதிவாகி இருந்தது. இந்த காட்சியை வைத்து போலீசார், திருட்டில் ஈடுபட்ட மர்மநபரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு