பாடாலூர்,
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, நாட்டார்மங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன்(வயது 65). இவர் அப்பகுதியில் ஆலத்தூர்கேட் செல்லும் சாலையில் முத்தையா கோவில் அருகே உள்ள தனது வயலில் நடவு பணிக்காக பட்டறை அமைத்து, சுத்தம் செய்த 300 கிலோ எடை கொண்ட 5 மூட்டை விதை வெங்காயத்தை வைத்திருந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அந்த வெங்காய மூட்டைகளை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
போலீசார் விசாரணை
நேற்று காலை வயலுக்கு சென்ற கணேசன், வெங்காய மூட்டைகள் திருடப்பட்டுள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து பாடாலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.