திருப்பூர்,
திருப்பூர் கொங்கு மெயின் ரோடு கொடிக்கம்பம் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் (வயது 25). இவர் அப்பகுதியில் உள்ள பனியன் பிரிண்டிங் பட்டறையில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த 15 வயதுடைய 10-ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அறிந்ததும் சிறுமியின் பெற்றோர் இருவரையும் கண்டித்து உள்ளனர். பின்னர் மாணவியை அவருடைய உறவினர் வீட்டுக்கு அனுப்பி வைத்து விட்டனர்.
இந்த நிலையில் மாணவி 6 மாத கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. இதை தொடர்ந்து மாணவியின் பெற்றோர் திருப்பூர் வடக்கு மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அனுராதா இதுகுறித்து விசாரணை நடத்தியதில் மாணவியை, கார்த்திக் ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போக்சோ சட்டத்தின் கீழ் கார்த்திக்கை போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.