மாவட்ட செய்திகள்

தூத்துக்குடி தி.மு.க. பிரமுகர் கொலை வழக்கில் - பொள்ளாச்சி கோர்ட்டில் 2 பேர் சரண்

தூத்துக்குடி தி.மு.க. பிரமுகர் கொலை வழக்கில் பொள்ளாச்சி கோர்ட்டில் 2 பேர் சரணடைந்தனர்.

பொள்ளாச்சி,

தூத்துக்குடி அருகே உள்ள குலையன்கரிசல் பகுதியை சேர்ந்தவர் கருணாகரன் (வயது 64). இவர் தி.மு.க. செயற்குழு உறுப்பினராக பதவி வகித்து வந்தார். கடந்த 22-ந்தேதி குலையன்கரிசலில் இருந்து திரவியபுரம் செல்லும் ரோட்டில் உள்ள தனது தோட்டத்துக்கு தனியாக காரில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம கும்பல் அவரை வழிமறித்து காரில் இருந்து இழுத்துப்போட்டு அரிவாளால் வெட்டி கொலை செய்தனர். இதுகுறித்து புதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர் முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக 5 பேரை கைது செய்தனர். மேலும் சிலரை புதுக்கோட்டை போலீசார் தேடி வந்தனர்.

இந்த நிலையில் பொள்ளாச்சி ஜே.எம். 1 மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் குலையன் கரிசலை சேர்ந்த சரவணன் (27), சக்திவேல் (20) ஆகிய 2 பேர் நேற்று மாலை சரண் அடைந்தனர். மாஜிஸ்திரேட்டு தங்கமணி கணேஷ் சரண் அடைந்த 2 பேரையும் 2-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.

இதையடுத்து பொள்ளாச்சி கிழக்கு போலீசார் சரவணன், சக்திவேலை கோவை மத்திய சிறையில் அடைத்தனர். தூத்துக்குடி தி.மு.க. பிரமுகர் கொலை வழக்கில் பொள்ளாச்சி கோர்ட்டில் 2 பேர் சரண் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்