மாவட்ட செய்திகள்

பெண்களை அவதூறாக பேசியவர்களை கைது செய்யக்கோரி போலீஸ் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகை

பெண்களை அவதூறாக பேசியவர்களை கைது செய்யக்கோரி கல்லாவி போலீஸ் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

ஊத்தங்கரை,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த கல்லாவி ஊராட்சிக்குட்பட்ட பெருமாள்நாய்க்கன்பட்டி பகுதியை சேர்ந்த இளைஞர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் கோழிநாய்க்கன்பட்டி கிராமத்தை சேர்ந்த பெண்களை அவதூறாக பேசி வாட்ஸ்ஆப்பில் வெளியிட்டதாகவும் புகார் எழுந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்தநிலையில், பெண்களை அவதூறாக பேசிவர்களை கைது செய்யக்கோரி கோழிநாய்க்கன்பட்டி கிராமத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று கல்லாவி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். அப்போது போலீசாருடன் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து கல்லாவி போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரப்பன், சப்-இன்ஸ்பெக்டர் பழனிசாமி மற்றும் போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது இதுதொடர்பாக 17 வயது சிறுவன் மத்தூர் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்துள்ளார். அவர் கைது செய்யப்பட்டு சேலம் சிறார் பள்ளியில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது நண்பர் 17 வயது சிறுவன் தலைமறைவாக உள்ளார். அவரை தேடி வருகிறோம். இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்தனர். இதையடுத்து முற்றுகையை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். பொதுமக்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு