மாவட்ட செய்திகள்

தீவட்டிப்பட்டி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் தாய், மகன் உள்பட 3 பேர் பலி

தீவட்டிப்பட்டி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் தாய், மகன் உள்பட 3 பேர் பலியானார்கள்.

ஓமலூர்:

தீவட்டிப்பட்டி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் தாய், மகன் உள்பட 3 பேர் பலியானார்கள்.

இந்த விபத்து பற்றிய விவரம் வருமாறு:-

கல் உடைக்கும் தொழிலாளர்கள்

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியை சேர்ந்தவர் குப்பன். இவருடைய மனைவி முனியம்மாள் (45). இவர்களது மகன் மணி (29), மருமகன் சபரி (27). இவர்கள் நாமக்கல்லில் தங்கி கல் உடைக்கும் தொழிலாளர்களாக வேலை செய்து வந்தனர்.

நேற்று வேலையை முடித்துவிட்டு பாலக்கோட்டிற்கு மணி, சபரி, முனியம்மாள் ஆகிய 3 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் சென்றனர்.

விபத்தில் பலி

தொப்பூர்-சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி சோதனைச்சாவடி அருகே சேலத்தில் இருந்து தர்மபுரி நோக்கி முன்னால் சென்ற லாரியை அவர்கள் முந்தி செல்ல முயன்றதாக கூறப்படுகிறது.

அப்போது லாரி டிரைவர் லாரியை வலதுபுறம் திருப்பியதாக தெரிகிறது. இதனால் மோட்டார் சைக்கிள் ரோட்டில் இரும்பு தடுப்பில் மோதியது. இதன் காரணமாக அவர்கள் 3 பேரும் மோட்டார் சைக்கிளுடன் லாரிக்குள் விழுந்தனர். இதில் லாரியின் சக்கரத்தில் சிக்கி 3 பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

விசாரணை

இது குறித்த தகவலின் பேரில் தீவட்டிப்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓமலூர் அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், மகன், மருமகன் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு