மாவட்ட செய்திகள்

தண்டராம்பட்டு அருகே மழைக்கு வீடு இடிந்தது 3 பேர் உயிர் தப்பினர்

தண்டராம்பட்டு அருகே மழைக்கு வீடு இடிந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக 3 பேர் உயிர் தப்பினர்.

தினத்தந்தி

வாணாபுரம்,

தண்டராம்பட்டு அருகே காம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன், விவசாயி. இவருக்கு ஜெயந்தி என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். இவர்கள் ஓட்டு வீட்டில் வசித்து வந்தனர்.

கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழைக்கு முருகேசனின் வீட்டு சுவர் தளர்ந்து இடிந்து விழும் அபாய நிலையில் இருந்தது. இதை அறியாமல் அவர்கள் இருந்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை ஓட்டு வீடு திடீரென இடிந்து விழுந்தது.

3 பேர் உயிர் தப்பினர்

அந்த நேரத்தில் வீட்டுக்குள் முருகேசன், அவரது மனைவி, மகன் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு