மாவட்ட செய்திகள்

திருச்செந்தூர், குலசேகரன்பட்டினத்தில் 3 ஆயிரம் பேருக்கு நிவாரண பொருட்கள் கனிமொழி எம்.பி. வழங்கினார்

திருச்செந்தூர், குலசேகரன்பட்டினத்தில் 3 ஆயிரம் பேருக்கு நிவாரண பொருட்களை கனிமொழி எம்.பி. வழங்கினார்.

திருச்செந்தூர்,

மறைந்த முன்னாள் தி.மு.க. தலைவர் கருணாநிதி பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, தி.மு.க. தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. ஏற்பாட்டில், திருச்செந்தூர் வீரபாண்டியன்பட்டினம் தனியார் மண்டபத்தில் நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

கனிமொழி எம்.பி. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு 1,500 ஏழைகளுக்கு அரிசி, மளிகை பொருட்கள் உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினார். மாநில மாணவர் அணி துணை அமைப்பாளர் உமரி சங்கர், ஆழ்வார்திருநகரி யூனியன் தலைவர் ஜனகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதேபோன்று குலசேகரன்பட்டினம் கருங்காளி அம்மன் கோவில் தெருவில் நடந்த நிகழ்ச்சிக்கு அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். கனிமொழி எம்.பி. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு 1,500 பேருக்கு அரிசி, மளிகை பொருட்கள் உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினார்.

உடன்குடி யூனியன் தலைவர் பாலசிங், யூனியன் துணை தலைவர் மீரா சிராஜூதீன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தி.மு.க. முன்னாள் தலைவர் கருணாநிதி பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, வடக்கு ஆத்தூரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. தி.மு.க. தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி, 250 ஏழைகளுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.

நகர பொறுப்பாளர் முருக பெருமாள், மாநில மாணவர் அணி துணை அமைப்பாளர் உமரி சங்கர், புன்னக்காயல் பஞ்சாயத்து தலைவி சோபியா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்