மாவட்ட செய்திகள்

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்களை தூர்வார அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் விவசாயிகள் கோரிக்கை

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்களை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கோரிக்கை விடப்பட்டது.

திருவள்ளூர்,

திருவள்ளூரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் ஆர்.டி.ஓ. ரத்னா, வேளாண்மைத்துறை இணை இயக்குனர் பாண்டியன், வேளாண்மை அலுவலர் எபினேசன் மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

அப்போது விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்து, அவர்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். கூட்டத்திற்கு வந்திருந்த விவசாயிகள், திருவள்ளூர் மாவட்டத்தில் அனுமதியின்றி செயல்படும் இறால் மற்றும் வண்ணமீன் பண்ணைகளை உடனடியாக அகற்ற வேண்டும். ஏரி, குளங்களை தூர்வார வேண்டும்.

நிலுவையில் உள்ள விவசாயிகளின் நிலுவைத்தொகையை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் மனு அளித்தனர்.

பின்னர் விவசாய குழுக்களுக்கு தலா ரூ.5 லட்சம் மதிப்புள்ள 6 டிராக்டர்கள், ரூ.30 லட்சம் மதிப்பில் மானியத்தொகையை விவசாயிகளுக்கு கலெக்டர் வழங்கினார்.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு