மாவட்ட செய்திகள்

திருவள்ளூர், லாரி மோதி தனியார் நிறுவன ஊழியர் பலி

சாலையை கடக்க முயன்றபோது, திருவள்ளூரில் இருந்து மணவாளநகர் நோக்கி வேகமாக வந்த லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக அவர் மீது மோதியது.

திருவள்ளூர்,

திருவள்ளூர் பெரியகுப்பத்தை சேர்ந்தவர் ஜேம்ஸ் (வயது 39). தனியார் நிறுவன ஊழியர். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வந்த ஜேம்ஸ் திருவள்ளூரில் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் ஜேம்ஸ் ஆஸ்பத்திரிக்கு எதிரே உள்ள டீக்கடையில் டீ குடிப்பதற்காக சென்றார். அப்போது அவர் சாலையை கடக்க முயன்றபோது, திருவள்ளூரில் இருந்து மணவாளநகர் நோக்கி வேகமாக வந்த லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக அவர் மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த ஜேம்ஸ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார்.இதுகுறித்து திருவள்ளூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்