மாவட்ட செய்திகள்

திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவில் பிரமோற்சவம்

திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவில் பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருவள்ளூரில் மிகவும் பழமை வாய்ந்த 108 திவ்ய தேசங்களில் ஒன்றான வீரராகவ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தை மாத பிரமோற்சவ விழா ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டின் விழா நேற்று காலை 5.50 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக சாமி வெளி புறப்பாடு நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்துசெய்யப்பட்டது. மேலும் அனைத்து நிகழ்ச்சிகளும் கோவில் வளாகத்திற்கு உள்ளேயே நடத்தப்பட்டு வருகிறது. மேலும் விழாவின் முக்கிய நிகழ்வாக வருகிற 29-ந்தேதி (சனிக்கிழமை) காலை 5 மணிக்கு கருட சேவையும், 2-ந்தேதி திருத்தேர் திருவிழாவும், 4-ந்தேதி (வெள்ளிக்கிழமை) சாமிக்கு திருமஞ்சனம் மற்றும் தீர்த்தவாரியும் நடைபெற உள்ளது.

பிரமோற்சவ விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் கவுரவ ஏஜெண்டு சம்பத் மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு