மாவட்ட செய்திகள்

திருவண்ணாமலை; கல்லூரி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து தர்ணா போராட்டம்

அரியர் தேர்வுக்கு மீண்டும் கட்டணம் வசூலிக்க எதிர்ப்பு தெரிவித்து கல்லூரி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை

அரியர் தேர்வுக்கு மீண்டும் கட்டணம் வசூலிக்க எதிர்ப்பு தெரிவித்து கல்லூரி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து தர்ணா பேராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரியர் தேர்வுக்கு மீண்டும் கட்டணம்

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த கல்வி ஆண்டில் செமஸ்டர் தேர்வு நடைபெறவில்லை.

அதைத் தொடர்ந்து இத்தேர்விற்கு கட்டணம் செலுத்தி விண்ணப்பித்தவர்கள் மற்றும் அரியர் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்தது.

இதனை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தற்போது மாணவர்கள் தேர்வில் வெற்றி பெற்றதாக மதிப்பெண் சான்று வழங்கப்பட்டு விட்டன.

கொரோனா காலத்தில் நடைபெறாத அரியர் தேர்வு மீண்டும் நடைபெறும் என்றும், இதற்கான தேர்வு கட்டணம் வசூலிக்கவும் கல்லூரிகளுக்கு வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் அறிவுறுத்தியுள்ளது.

மாணவர்கள் தர்ணா போராட்டம்

இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து திருவண்ணாமலை அரசு கல்லூரியை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி நுழைவு வாயில் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து மாணவர்கள் கூறுகையில், தேர்வு வேண்டுமானால் மீண்டும் நடத்திக் கொள்ளலாம். ஆனால் 2-வது முறையாக தேர்வுக்கட்டணம் வசூலிப்பதை ஏற்க மாட்டோம் என்று தெரிவித்தனர்.

இதையடுத்து கல்லூரி தரப்பில் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் உங்களின் கோரிக்கைகளை பல்கலைக்கழகத்திடம் தெரிவித்து உரிய தீர்வு காணப்படும் என கல்லூரி தரப்பில் மாணவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து மாணவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு