கம்பம்:
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய அரசை கண்டித்தும் கம்பத்தில் நேற்று ஆர்ப்பாட்டம நடைபெற்றது.
இதற்கு கம்பம் நகர தலைவர் தமிமுன் அன்சாரி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் அப்பாஸ் மந்திரி முன்னிலை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் த.மு.மு.க.வினர் ஏராளமானவர்கள் கலந்துகொண்டு, சமூக இடைவெளியை பின்பற்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி கோஷம் எழுப்பினர்.