மாவட்ட செய்திகள்

திருமணம் செய்யும்படி பெற்றோர் கூறியதால் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை

திருமணம் செய்யும்படி பெற்றோர் கூறியதால், நேற்று முன்தினம் வீட்டில் இருந்த வெண்ணிலா திடீரென தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.

பூந்தமல்லி,

சென்னை அரும்பாக்கம், திருவள்ளுவர் நகர், கண்ணகி தெருவை சேர்ந்தவர் ஜெயந்தி(வயது 41). இவரது மகள் வெண்ணிலா (23). தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் வீட்டில் இருந்த வெண்ணிலா திடீரென தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த வீட்டில் இருந்தவர்கள் விரைந்து செயல்பட்டு வெண்ணிலா உடலில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். ஆனாலும் வெண்ணிலா உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அரும்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் வெண்ணிலா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். அப்போது வெண்ணிலாவுக்கு திருமணம் செய்து வைக்க முடிவெடுத்த அவரது பெற்றோர் அவரிடம் தெரிவித்து தீவிரமாக மாப்பிள்ளை பார்த்து வந்தனர்.

திருமணத்திற்கு அவருக்கு விருப்பம் இல்லை என கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த வெண்ணிலா தற்கொலை செய்து கொண்டு இருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. மேலும் அவரது மரணத்திற்கு வேறு ஏதும் காரணம் உள்ளதா? என்பது பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு