மாவட்ட செய்திகள்

போலீசாருக்கு கொலை மிரட்டல்; 5 வாலிபர்கள் கைது

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், வெங்கல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மூர்த்தி தலைமையில் போலீசார் நேற்றுமுன்தினம் இரவு ரோந்து பணியை மேற்கொண்டனர்.

தினத்தந்தி

பெரியபாளையம்,

பூச்சிஅத்திப்பேடு அருகே உள்ள சிங்கிலி குப்பம் விளையாட்டு மைதானம் அருகே சென்ற போது சில வாலிபர்கள் கும்மாளம் அடித்து கொண்டிருந்ததை கண்ட போலீசார் அவர்களை அங்கிருந்து செல்லுமாறு கூறினர்.

அதற்கு அந்த வாலிபர்கள் தாங்கள் பிறந்த நாள் விழாவை கொண்டாடி வருவதாகவும், எனவே தொல்லை செய்ய வேண்டாம் எனக்கூறி தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக போலீசார் அவர்களை சுற்றி வளைத்து கைது செய்து காரை பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்தனர்.

விசாரணையில் அந்த வாலிபர்கள் சிங்கிலி குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர்களான ராஜேஷ் (வயது 32), மணிகண்டன் (28), விஜயகுமார் (25), அருண்குமார் (27) மற்றும் சென்னை அனகாபுத்தூரை சேர்ந்த ரமேஷ் (29) என தெரியவந்தது.

இந்த 5 வாலிபர்கள் மீது வெங்கல் போலீஸ் இன்ஸ் பெக்டர் ஜெயவேல் தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து, திருவள்ளூர் முதல்நிலை குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது