மாவட்ட செய்திகள்

முகப்பேர் அருகே பள்ளி மாணவனிடம் நூதன முறையில் நகை ‘அபேஸ்’

முகப்பேர் அருகே பள்ளி மாணவனிடம் நூதன முறையில் நகையை ‘அபேஸ்’ செய்த மர்மநபர் தப்பி ஓடிவிட்டார்.

பூந்தமல்லி,

ஜெ.ஜெ.நகரை சேர்ந்தவர் கேசவன். இவரது மகன் ஆல்டின் (வயது 17). பிளஸ்-2 படித்து வருகிறார். இவர் ஜெ.ஜெ.நகர், கோல்டன் ஜார்ஜ் நகர் வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த ஒரு வாலிபர் ஆல்டினை வழிமறித்து, தன்னை போலீஸ் என்று கூறி உள்ளார். மேலும் இப்பகுதியில் நகை பறிப்பு அடிக்கடி நடந்து வருவதாகவும், எனவே அணிந்திருக்கும் நகைகளை கழற்றி பையில் வைத்து எடுத்துச் செல்லுமாறு கூறியுள்ளார்.

இதனை உண்மை என்று நம்பி மாணவன் ஆல்டின் தான் அணிந்திருந்த 6 பவுன் நகையை கழற்றி அவரிடம் கொடுத்தார். அதை வாங்கிய அந்த மர்ம நபர் ஒரு தாளில் மடித்து ஆல்டினிடம் கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார். சிறிது தூரம் சென்றபிறகு ஆல்டின் அந்த தாளை பிரித்து பார்த்தபோது, அதில் நகை இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து ஜெ.ஜெ.நகர் போலீஸ் நிலையத்தில் தந்தை கேசவன் புகார் அளித்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.

குரோம்பேட்டை, கணபதிபுரம், முனுசாமி தெருவைச் சேர்ந்தவர் லட்சுமணராவ் (71). ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர். இவர் நேற்று முன்தினம் குரோம்பேட்டையில் இருந்து வடபழனி செல்லும் அரசு பஸ்சில் வந்து கொண்டிருந்தார். பின்னர் வடபழனி பஸ் நிலையம் வந்ததும் லட்சுமணராவ் கீழே இறங்கினார். அப்போது அங்கு வந்த நபர் ஒருவர் தன்னை ஒரு போலீஸ்காரர் என்று கூறி லட்சுமணராவை அழைத்துச்சென்று கஞ்சா வைத்துள்ளதாக கூறி சோதனை செய்ய வேண்டும் என்று கூறினார்.

அங்கு லட்சுமண ராவிடம், சோதனை செய்வது போல் நடித்து அவரது பையில் இருந்த மோதிரத்தை திருடிவிட்டு மர்ம நபர் தப்பி சென்றார். சிறிது தூரம் சென்று லட்சுமணராவ் அவரது பையை பார்த்தபோது, அதில் அவர் வைத்திருந்த 3 பவுன் மோதிரங்கள் இல்லாமல் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து வடபழனி போலீசில் புகார் அளித்ததையடுத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்