மாவட்ட செய்திகள்

திருவாரூர் மாவட்டத்திற்கு விதை, உரம், பசுந்தாள் உர விதைகள் வினியோகத்திற்கு ரூ.12½ கோடி நிதி ஒதுக்கீடு கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தகவல்

திருவாரூர் மாவட்டத்திற்கு விதை, உரம் மற்றும் பசுந்தாள் உர விதைகள் வினியோகத்திற்கு ரூ.12½ கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்தார்.

கொரடாச்சேரி,

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியத்திற்குட்பட்ட எண்கண் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் குறுவை தொகுப்பு திட்டத்தின் கீழ் விவசாய உதவி பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் காயத்ரிகிருஷ்ணன் தலைமை தாங்கி, விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் ரசாயன உரங்களை வழங்கினார். பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் குறுவை தொகுப்பு திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.2,125 மதிப்பிலான 2 மூட்டை யூரியா, ஒரு மூட்டை டி.ஏ.பி. மற்றும் மூட்டை பொட்டாஷ் ஆகிய ரசாயன உரங்களை மாவட்ட கலெக்டர் வழங்கி தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து எண்கண் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் குறுவை கடனாக ஏழை விவசாயிகளுக்கு ரூ.5 லட்சத்து 44 ஆயிரத்து 881-க்கான கடன் தொகையினை கலெக்டர் வழங்கினார். பின்னர் அவர் கூறியதாவது.

குறுவை தொகுப்பு திட்டத்தின் கீழ் அரசு டெல்டா மாவட்டங்களுக்கு ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதில் திருவாரூர் மாவட்டத்திற்கு விதை, உரம் மற்றும் பசுந்தாள் உர விதைகள் வினியோகத்திற்கு ரூ.12.53 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வேளாண் பொறியியல் துறை மூலம் மனித சக்தியால் செயல்படும் நெல் நடவு எந்திரம் ஒன்றிற்கு ரூ.1.5 லட்சம் மானியத்திலும், எந்திர சக்தியால் செயல்படும் நெல் நடவு எந்திரம் ஒன்றுக்கு ரூ.5 லட்சம் மானியத்திலும், களை எடுக்கும் எந்திரம் ஒன்றிற்கு ரூ.35 ஆயிரம் மானியத்திலும், நெல் அறுவடை எந்திரம் ஒன்றிற்கு ரூ.11 லட்சம் மானியத்திலும் மற்றும் வைக்கோல் கட்டும் எந்திரம் ஒன்றிற்கு ரூ.5.50 லட்சம் மானியத்திலும் வழங்கப்பட உள்ளது.

திருவாரூர் மாவட்டத்திற்கு பண்ணைக்குட்டைகள் அமைப்பதற்கு ரூ.22.50 லட்சம் மானியம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த குறுவை தொகுப்பு திட்டத்தின் கீழ் பயன்பெற தங்கள் பகுதி வேளாண்மை உதவி இயக்குனரை தொடர்பு கொண்டு கூடுதல் விவரங்களை பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

இதில் மாவட்ட ஊராட்சி தலைவர் பாலசுப்பிரமணியன், மாவட்ட வருவாய் அலுவலர் பொன்னம்மாள், திருவாரூர் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சிவக்குமார், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஜெயராமன், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் கலியபெருமாள், ஒன்றியக்குழு துணைத்தலைவர் பாலசந்திரன், எண்கண் ஊராட்சி மன்ற தலைவர் செந்தில் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு