மாவட்ட செய்திகள்

ராயபுரத்தில் கடைகளை அடைக்க அறிவுறுத்திய அதிகாரிகளை வியாபாரிகள் முற்றுகை

தமிழக அரசு எடுத்த பல்வேறு நடவடிக்கைகளின் காரணமாக தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று குறைந்து வந்தது. இதனால் ஊரடங்கில் அவ்வப்போது பல்வேறு தளர்வுகளையும் அறிவித்து வந்தது.

தினத்தந்தி

இந்த நிலையில், தற்போது சற்று நோய்த்தொற்று அதிகரித்து உள்ளதால் மக்கள் கூடும் இடங்களை மூட அந்தந்த மாவட்ட கலெக்டருக்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் தியாகராய நகர் ரங்கநாதன் சாலை, பாரிமுனை கொத்தவால்சாவடி பகுதி, ராயபுரம் எம்.சி.ரோடு என பொதுமக்கள் அதிகம் கூடும் 9 இடங்களில் முன்னெச்சரிக்கையாக மூட

உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த பகுதியில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. ராயபுரம் எம்.சி. ரோட்டில் ஆய்வு செய்த மண்டல அலுவலர் தமிழ்செல்வன் திறந்திருந்த கடைகளை மூடுமாறு அறிவுறுத்தினார்.

மாநகராட்சி சார்பில் வாகனங்களில் ஒலிபெருக்கி மூலம் கடைகளை அடைக்க வேண்டும் என்று வியாபாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து அப்பகுதி வியாபாரிகள் திடீரென அதிகாரிகளை முற்றுகையிட்டு இந்த திடீர் அறிவிப்பால் தாங்கள் அவதி அடைவதாக கூறி கோஷங்கள் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு