மாவட்ட செய்திகள்

கிராமப்புறத்தில் சிறு கோவில்களில் வில்லிசை நடத்த அனுமதிக்க வேண்டும் - கலெக்டர் அலுவலகத்தில் கலைஞர்கள் கோரிக்கை

கிராமப்புறத்தில் சிறு கோவில்களில் வில்லிசை நடத்த அனுமதிக்க வேண்டும் என கலெக்டர் அலுவலகத்தில் கலைஞர்கள் கோரிக்கை விடுத்தனர்.

தினத்தந்தி

தென்காசி,

கீழப்பாவூர் நவநீத கிருஷ்ணபுரம் கிராமிய வில்லிசை கலைஞர்கள் முன்னேற்ற சங்க தலைவர் ஜெகநாதன் தலைமையில் வில்லிசை கலைஞர்கள் தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அதில் கூறப்பட்டிருப்பதாவது:-

நாங்கள் தலைமுறை தலைமுறையாக எங்களின் குலத்தொழிலான வில்லிசையை நம்பி வாழ்ந்து வருகிறோம். சுமார் 3 ஆயிரம் குடும்பங்கள் இதை வைத்து பிழைத்து வருகிறது. தற்போது கொரோனா வைரசால் சுமார் 6 மாத காலமாக வேலையின்றி எங்களின் குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறோம். இதனை மாற்றியமைக்க கிராமப்புறத்தில் உள்ள சிறிய கோவில்களுக்கு நாட்டுப்புற கிராமிய கலையான வில்லிசை நடத்த அனுமதி வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது