மாவட்ட செய்திகள்

2-வது திருமணம் செய்து கொள்ளும்படி இளம்பெண்ணுக்கு தொல்லை கொடுத்த கம்ப்யூட்டர் என்ஜினீயர் கைது

2-வது திருமணம் செய்துகொள்ளும்படி இளம்பெண்ணுக்கு தொல்லை கொடுத்த கம்ப்யூட்டர் என்ஜினீயரை போலீசார் கைது செய்தனர்.

தினத்தந்தி

ஆலந்தூர்,

சென்னையை அடுத்த கீழ்கட்டளை பகுதியை சேர்ந்தவர் ஷாலினி. தற்போது இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது.

ஷாலினி, நியூசிலாந்தில் வேலை செய்தபோது நாகர்கோவிலை சேர்ந்த ராகேஷ் (29) என்ற கம்ப்யூட்டர் என்ஜினீயரும் அவருடன் பணியாற்றி வந்தார். அப்போது அவர், ஷாலினியை ஒருதலையாக காதலித்து வந்து உள்ளார்.

அதன்பிறகு ஷாலினி திருமணமாகி சென்னையில் தங்கிவிட்டார். இதனால் ராகேஷ், நியூசிலாந்தில் தனது வேலையை விட்டுவிட்டு சென்னை வந்தார். தான் ஒருதலையாக காதலித்த ஷாலினியிடம், தன்னை 2-வதாக திருமணம் செய்யுமாறு ராகேஷ் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்த புகாரின் பேரில் மடிப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசங்கர் வழக்குப்பதிவு செய்து ராகேசை கைது செய்து விசாரித்து வருகிறார்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை