மாவட்ட செய்திகள்

மின்சாரம் பாய்ந்து லாரி டிரைவர் சாவு

தேவதானப்பட்டி அருகே மின்சாரம் பாய்ந்து லாரி டிரைவர் பலியாகினார்.

தினத்தந்தி

தேவதானப்பட்டி:

தேவதானப்பட்டி அருகே உள்ள குள்ளபுரத்தை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 30). இவர் சங்கரமூர்த்திபட்டியில் உள்ள கல்குவாரியில் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தார். நேற்று கல்குவாரியில் மோட்டார் சுவிட்சை எதிர்பாராதவிதமாக அவர் தொட்டார். இதில் அவர் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார்.

உடனே அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே முத்துக்குமார் உயிரிழந்தார். இதுகுறித்து ஜெயமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது