மாவட்ட செய்திகள்

செல்போனை தட்டிவிட்ட மந்திரி டி.கே.சிவக்குமார்

‘செல்பி’ எடுக்க முயன்ற தொண்டரின் செல்போனை தட்டிவிட்ட மந்திரி டி.கே.சிவக்குமார், இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பெங்களூரு,

முதல்-மந்திரி சித்தராமையா மந்திரி சபையில் மின்சாரத்துறை மந்திரியாக இருப்பவர் டி.கே.சிவக்குமார். அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வருகிற 10-ந் தேதி பல்லாரி மாவட்டம் ஒசப்பேட்டேயில் நடைபெற உள்ள விழாவில் கலந்து கொள்ள இருப்பதையொட்டி, விழா மேடை அமைக்கும் பணியை பார்வையிட டி.கே.சிவக்குமார் நேற்று ஒசப்பேட்டேக்கு சென்றார்.

அப்போது, கட்சி தொண்டர் ஒருவர் அவர் அருகே நின்று டி.கே.சிவக்குமாருடன் செல்போனில் செல்பி எடுக்க முயற்சித்தார். இதை பார்த்து கோபமடைந்த டி.கே.சிவக்குமார் அந்த தொண்டரின் கையில் இருந்த செல்போனை தட்டிவிட்டார். இதனால் செல்போன் கீழே விழுந்தது. இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வீடியோ தனியார் தொலைக்காட்சிகளிலும் வெளியானது.

இதேபோல் 3 மாதங்களுக்கு முன்பு பெலகாவியில் நடந்த விழாவில் கலந்து கொண்ட தொண்டர் ஒருவர் டி.கே.சிவக்குமாருடன் செல்பி எடுக்க முயன்றபோதும் செல்போனையும் அவர் தட்டிவிட்டது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்