மாவட்ட செய்திகள்

தூத்துக்குடியில் வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் தற்கொலை

தூத்துக்குடியில் வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் தர்மராஜ் மகன் ரமேஷ் (வயது 36). தையல் தொழிலாளி. இவருக்கு தேவிகா (34) என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகளும் உள்ளனர்.

ரமேசுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று மது போதையில் வீட்டுக்கு வந்த ரமேசை தேவிகா கண்டித்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த ரமேஷ் வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

தூத்துக்குடி ராஜூவ்காந்தி நகரை சேர்ந்தவர் செல்வம் மகன் ஞானபிரகாசம் (25). மீனவர். இவரது திருமணத்துக்கு வீட்டில் வரன் பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. இதில் விருப்பம் இல்லாத ஞானபிரகாசம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த 2 சம்பவங்கள் குறித்தும் தூத்துக்குடி தாளமுத்துநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்