மாவட்ட செய்திகள்

போலி விசாவில் வெளிநாடு செல்ல முயன்ற பெண் உள்பட 2 பேர் கைது ஜெய்ப்பூரை சேர்ந்தவர்கள்

போலி விசாவில் வெளிநாடு செல்ல முயன்ற ஜெய்ப்பூரை சேர்ந்த பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

மும்பை,

மும்பையில் இருந்து கத்தார் நாட்டிற்கு செல்லும் விமானம் ஒன்று நேற்று முன்தினம் புறப்பட தயார் நிலையில் இருந்தது. இந்த விமானத்தில் பயணம் செய்ய வந்த பயணிகளிடம் குடியுரிமை அதிகாரிகள் பாஸ்போர்ட்டுகளை வாங்கி சோதனை செய்தனர். அப்போது, அந்த விமானத்தில் பயணம் செய்ய வந்த பெண் உள்பட 2 பேரின் பாஸ்போர்ட்டுகள் மற்றும் விசாவை வாங்கி அதிகாரிகள் சோதனை செய்தனர்.

இதில், அவர்கள் வைத்திருந்தது போலி விசா என்பது தெரியவந்தது. இதுபற்றி அதிகாரிகள் சாகர் போலீசில் புகார் அளித்தனர்.

2 பேர் கைது

புகாரின்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று, போலிவிசாவில் பயணம் செய்ய முயன்ற 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர். இதில், அவர்கள் ஜெய்ப்பூரை சேர்ந்த சிக்கந்தர் ஆலம் (வயது36), ரேஷ்மா(26) ஆகியோர் என்பதும், ஜெய்ப்பூரை சேர்ந்த ஏஜெண்ட் ஒருவர் தலா ரூ.50 ஆயிரம் வாங்கிக்கொண்டு போலி விசா தயாரித்து கொடுத்ததாக தெரிவித்தனர்.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, இருவரையும் கைது செய்தனர். மேலும் போலி விசா தயாரித்து கொடுத்த ஏஜெண்டை பிடிக்க விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு