மாவட்ட செய்திகள்

ஜெகதாப்பட்டினம் அருகே அட்டைகள்-கடல் குதிரைகள் பறிமுதல் 2 பேர் கைது

ஜெகதாப்பட்டினம் அருகே அட்டைகள் மற்றும் கடல் குதிரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கோட்டைப்பட்டினம்,

புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினம் பகுதியில் கடல் அட்டைகள், கடல் குதிரைகள் போன்றவை கடத்தப்படுவதாக கடலோர காவல் குழும போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் மணமேல்குடி கடலோர காவல் குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னலெட்சுமி தலைமையில் போலீசார் நேற்று காலை ஜெகதாப்பட்டினம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஜெகதாப்பட்டினம் அருகே உள்ள ஏம்பவயல் கிராமத்தில் 2 பேர் கையில் மூட்டையுடன் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்தனர். அவர் களை 2 பேரையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில், ஏம்பவயல் பகுதியை சேர்ந்த நடராஜன்(வயது 40) என்பதும், மற்றொருவர் அய்யம்பட்டினத்தை சேர்ந்த சசிகுமார்(29) என்பதும் தெரிய வந்தது. அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தியதில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதையடுத்து போலீசார் அவர்கள் கையில் வைத்திருந்த மூட்டைகளை பிரித்து பார்த்த போது அதில் அட்டைகள், பல்லிகள், கடல் குதிரைகள் போன்றவை இருந்தன.

இதையடுத்து கடலோர காவல் குழும போலீசார் அவர்களை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 20 கடல்அட்டைகள், 200 கடல் குதிரைகள், ஆயிரத்து 600 கடல் பல்லிகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றின் மதிப்பு லட்சக்கணக்கில் இருக்கும் என்று தெரிகிறது. பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகள், குதிரைகள், பல்லிகள் அறந்தாங்கி வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்