மாவட்ட செய்திகள்

தொப்பூர் கணவாயில் லாரி கவிழ்ந்து டிரைவர் உள்பட 2 பேர் படுகாயம்

தொப்பூர் கணவாயில் லாரி கவிழ்ந்து டிரைவர் உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

நல்லம்பள்ளி:

வேலூரில் இருந்து இரும்பு கம்பிகள் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி, தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் வழியாக நேற்று கோவைக்கு வந்து கொண்டு இருந்தது. லாரியை வேலூர் மாவட்டத்தை சேர்ந்த குமரன் (வயது 46) என்பவர் ஓட்டி வந்தார். அவருடன் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த கிளீனர் சுரேஷ் (42) உடனிருந்தார். தொப்பூர் இரட்டை பாலம் அருகே வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் டிரைவர், கிளீனர் ஆகிய 2 பேரும் இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து காரணமாக தொப்பூர் கணவாயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும் சுங்கச்சாவடி ரோந்து படையினர் விரைந்து வந்து படுகாயம் அடைந்த 2 பேரையும் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர். இந்த விபத்து குறித்து தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு