மாவட்ட செய்திகள்

காந்தியடிகளின் நினைவு தினத்தை முன்னிட்டு தீண்டாமை உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

தேச தந்தை மகாத்மா காந்தியடிகளின் நினைவு நாளை முன்னிட்டு கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று தீண்டாமை ஒழிப்பு மற்றும் தொழுநோய் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

தினத்தந்தி

இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் குணசேகரன் தலைமை தாங்கினார். அவர் தீண்டாமை ஒழிப்பு உறுதி மொழியை வாசிக்க அதனை பின் தொடர்ந்து கலெக்டர் அலுவலக ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் வாசித்து உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர்.

இதில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் அமீதுல்லா, தொழுநோய் துணை இயக்குனர் ஸ்ரீதேவி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் கலைச்செல்வி, அலுவலக மேலாளர் கணேசன், தனசேகரன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது