மாவட்ட செய்திகள்

உத்தரபிரதேச மாநில சம்பவம்: பெரியார் திராவிட கழகத்தினர்-போலீசார் தள்ளுமுள்ளு

உத்தரபிரதேச மாநில சம்பவம்: பெரியார் திராவிட கழகத்தினர்-போலீசார் தள்ளுமுள்ளு பெண்கள் உள்பட 50 பேர் கைது.

புதுச்சேரி,

உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தை சேர்ந்த 19 வயதான தலித் இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். இதனை கண்டித்தும், உத்தரபிரதேச மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் பதவி விலக வலியுறுத்தியும் தந்தை பெரியார் திராவிடர் கழக மகளிரணி சார்பில் புதுவை ராஜா தியேட்டர் சந்திப்பு அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு மகளிரணி தலைவர் சுகந்தி தலைமை தாங்கினார். நிர்வாகிகள் தேவி, கிருஷ்ணவேணி, பாரதி, தந்தை பெரியார் திராவிடர் கழக தலைவர் வீரமோகன், துணைத் தலைவர் இளங்கோ, செயலாளர் சுரேஷ் மற்றும் பலர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது திடீரென பிரதமர் நரேந்திர மோடி, யோகி ஆதித்யநாத் ஆகியோரது உருவபடங்களை சிலர் அவமதித்தனர். உடனே அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பெரியகடை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் மற்றும் போலீசார் அவர்களை தடுத்தனர்.

இதனால் போலீசாருக்கும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீசார் அவர்களிடம் இருந்து உருவ படங்களை பறிமுதல் செய்தனர். பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 50 பேரை கைது செய்து அப்புறப்படுத்தினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு