மாவட்ட செய்திகள்

மீஞ்சூர் அருகே நிரம்பி வழியும் வல்லூர் அணைக்கட்டு

மீஞ்சூரை அடுத்த சீமாபுரம் கிராமத்தில் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே வல்லூர் அணைக்கட்டு அமைந்துள்ளது. கடந்த ஆண்டுகளில் மழை காலங்களில்கூட இந்த அணைக்கட்டு பகுதியில் நீர் இன்றி வறண்டு காணப்பட்டது.

தினத்தந்தி

திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாகவும், பூண்டி ஏரியில் இருந்து திறக்கப்படும் கிருஷ்ணா நதிநீராலும் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. பூண்டி ஏரியில் இருந்து கொசஸ்தலை ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீர் திருகண்டலம், இருளிப்பட்டி, ஜெகநாதபுரம், வன்னிப்பாக்கம் கிராமங்களை கடந்து வல்லூர் அணைக்கட்டை வந்தடைகிறது.

இதனால் தற்போது வல்லூர் அணைக்கட்டு முழுவதும் நிரம்பி வழிகிறது. பல வருடங்களுக்கு பிறகு இந்த அணைக்கட்டு நிரம்பி உபரி நீர் வெளியேறும் காட்சியை அந்த பகுதி பொதுமக்கள் வேடிக்கை பார்த்து செல்கின்றனர். இதனால் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயருவதுடன், விவசாயத்துக்கு தேவையான தண்ணீரும், குடிக்க நல்ல சுத்தமான குடிநீரும் கிடைக்கும் என்பதால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது