மாவட்ட செய்திகள்

வேன்-பஸ் மோதல்

கொடைரோடு அருகே 4 வழிச்சாலையில் பஸ் மீது வேன் மோதியதில் முதியவர் ஒருவர் பலியாகினார்.

திண்டுக்கல் :

திண்டுக்கல் மாவட்டம் மதுரையில் இருந்து ஈரோடு நோக்கி சரக்கு வேன் ஒன்று நேற்று சென்று கொண்டிருந்தது.

வேனை ஈரோடு மாவட்டம் தேவம்பாளையத்தை சேர்ந்த கண்ணன் என்பவர் ஓட்டினார். வேனில் அவருடன் கொடுமுடி தாலுகா கோலா நல்லியை சேர்ந்த சாமிநாதன் (வயது 70) என்பவர் வந்தார்.

மதுரை-திண்டுக்கல் 4 வழிச்சாலையில் கொடைரோடு அருகே உள்ள சந்தோசபுரம் பிரிவு என்னுமிடத்தில் வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் தாறுமாறாக ஓடி, சாலையின் மறுபுறம் சென்றது.

அங்கு சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த தனியார் பஸ்சின் பின்பகுதியில் பயங்கரமாக மோதியது.

இதில் வேனில் இருந்த சாமிநாதன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.

தகவலறிந்த அம்மையநாயக்கனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முக லட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் பாலமுத்தையா மற்றும் சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து சென்றனர்.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் சதக் அப்துல்லா தலைமையில் தீயணைப்பு படையினர் வரவழைக்கப்பட்டு மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

விபத்தில் படுகாயமடைந்த வேன் டிரைவர் கண்ணனை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

வேனின் இடிபாடுகளில் சிக்கி இருந்த சாமிநாதனின் உடலை தீயணைப்பு படையினர் மீட்டனர். இதுகுறித்து அம்மையநாயக்கனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்