மாவட்ட செய்திகள்

வேடசந்தூர், குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் முற்றுகை

வேடசந்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை தேவகவுண்டன்பட்டியை சேர்ந்த பெண்கள் குடிநீர் கேட்டு காலிக்குடங் களுடன் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.

வேடசந்தூர்,

வேடசந்தூர் அருகே உள்ள மாரம்பாடி ஊராட்சி தேவகவுண்டன்பட்டியில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு மேல்நிலை நீர்த்தேக்கதொட்டி மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு ஆழ்துளை கிணற்றில் நீர் மட்டம் முற்றிலும் குறைந்தது. இதனால் அதில் தண்ணீர் வரவில்லை. மேலும் காவிரி கூட்டுக்குடிநீரும் வரவில்லை. இதனால் பெண்கள் தனியார் தோட்டங்களுக்கும், பக்கத்து ஊர்களுக்கும் நடந்து சென்று குடிநீர் பிடித்துவரவேண்டிய நிலை ஏற்பட்டது.

இது குறித்து ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. குடிநீர் பிரச்சினையால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர்.

இந்நிலையில் நேற்று காலை தேவகவுண்டன்பட்டியை சேர்ந்த பெண்கள் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் வேடசந்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். இதையடுத்து வேடசந்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கதிரவன் அங்கு விரைந்து வந்து முற்றுகை போராட்டம் நடத்திய பெண்களிடம், அதிகாரிகளை சென்று பாருங்கள் என்று கூறினார். இதனால் பெண்கள் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) சீத்தாராமனிடம் சென்று முறையிட்டனர். இதையடுத்து அவர், தற்போது நல்லமனார்கோட்டை முதல் மாரம்பாடி வரை சாலை அகலப்படுத்தும் பணியால் காவிரி கூட்டுக்குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதை உடனடியாக சீரமைத்து குடிநீர் வழங்கவும், மேலும் கூடுதலாக ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் வழங்கவும் நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதையடுத்து பெண்கள் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். வேடசந்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை குடிநீர் கேட்டு பெண்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு நிலவியது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்