மாவட்ட செய்திகள்

துத்திகுளம், பட்டத்தையன்குட்டையில் தூய்மை பணியாளர்களுக்கு காய்கறி தொகுப்பு தி.மு.க. சார்பில் வழங்கப்பட்டது

துத்திகுளம், பட்டத்தையன்குட்டையில் தூய்மை பணியாளர்களுக்கு காய்கறி தொகுப்பு தி.மு.க. சார்பில் வழங்கப்பட்டது.

தினத்தந்தி

சேந்தமங்கலம்,

சேந்தமங்கலம் ஒன்றியம் துத்திக்குளம் ஊராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் காய்கறி தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி தூய்மை பணியாளர்களை இருக்கையில் அமரவைத்து அவர்களுக்கு நாமக்கல் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் காய்கறி தொகுப்பை வழங்கினார்.

இதேபோல பெரியகுளம் ஊராட்சி பட்டத்தையன்குட்டை கிராமத்திலும், பல்வேறு ஊராட்சி பகுதிகளிலும் மாவட்ட பொறுப்பாளர் காய்கறிகளை தூய்மை பணியாளர்களுக்கு வழங்கினார். நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் அசோக்குமார், ஒன்றிய சேர்மன் மணி, மாலா சின்னுசாமி, துத்திகுளம் தலைவர் குணசேகரன், உஷாராணி அருணாசலம், பெரியகுளம் தலைவர் மாதேஸ்வரன், துணைத்தலைவர் ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது