மாவட்ட செய்திகள்

வேப்பேரி, தாம்பரத்தைச் சேர்ந்தவர்கள்: கொரோனா பாதிப்பால் மேலும் 2 சப்-இன்ஸ்பெக்டர்கள் பலி

கொரோனா வைரஸ் காரணமாக வேப்பேரி மற்றும் தாம்பரம் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

தினத்தந்தி

சென்னை,

சென்னையில் கொரோனா தொற்றால் போலீசார் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சென்னை மாநகர போலீஸ் துறையில் உதவி கமிஷனர் உள்பட 11 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்து உள்ளனர். இந்தநிலையில் கொரோனாவுக்கு மேலும் 2 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் பலியாகி உள்ளனர். சென்னை வேப்பேரி போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் இளங்கோவன் (வயது 55). இவர் கடந்த ஏப்ரல் 17-ந்தேதி கோவேக்சின் தடுப்பூசி செலுத்திக்கொண்டார். எனினும் அவர், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த மாதம் 28-ந்தேதி முதல் சென்னை ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் அவரது உயிர் பிரிந்தது.

இளங்கோவனுக்கு பாரதி (40) என்ற மனைவியும், மது (22), சுவீட்டி (19) ஆகிய 2 மகள்களும், சர்வேஷ் (4) என்ற மகனும் உள்ளனர். சென்னை வேப்பேரி போக்குவரத்து போலீஸ்நிலையத்தில் இன்ஸ்பெக்டர் உள்பட மேலும் 11 போலீசார் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதேபோல் சென்னையை அடுத்த தாம்பரம் போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் ஜான்ரூபஸ் (57). இவர், தாம்பரம் பாரதிதாசன் தெருவில் வசித்து வந்தார். இவருடைய சொந்த ஊர் கன்னியாகுமரி ஆகும்.

இவருக்கு கடந்த ஏப்ரல் மாதம் 28-ந்தேதி கொரோனா பாதிப்பு உறுதியானதால் சென்னை ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை சப்-இன்ஸ்பெக்டர் ஜான்ரூபஸ் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதன்மூலம் சென்னை மாநகர போலீஸ் துறையில் பலியானவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்து உள்ளது. இது சக போலீஸ்காரர்கள் இடையே பெரும் அச்சத்தையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை