விராலிமலையில் தி.மு.க. முதன்மை செயலாளர் கே.என்.நேரு வேட்பாளரை அறிமுகப்படுத்தி பேசியபோது எடுத்த படம் 
மாவட்ட செய்திகள்

விராலிமலை சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் தி.மு.க.முதன்மை செயலாளர் கே.என்.நேரு பங்கேற்பு

விராலிமலை சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் தி.மு.க.முதன்மை செயலாளர் கே.என்.நேரு பங்கேற்பு

விராலிமலை, மார்ச்.19-

விராலிமலை சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டம் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் செல்லபாண்டியன் தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர்கள் சந்திரன், சத்தியசீலன், மாரிமுத்து, இளங்குமரன், அய்யப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் விராலிமலை சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் பழனியப்பனை தி.மு.க. முதன்மை செயலாளர் கே.என்.நேரு, ஜோதிமணி எம்.பி., தி.மு.க. பேச்சாளர் திண்டுக்கல் லியோனி ஆகியோர் அறிமுகப்படுத்தி பேசினர்.

கூட்டத்தில் நேரு பேசுகையில், உங்கள் வேட்பாளர் பழனியப்பன் தொகுதிக்கு புதியவர் அல்ல. தலைவர் கருணாநிதியே நேரடியாக நியமித்தவர். நாங்கள் எம்.ஜி.ஆரை ஒரு போதும் விமர்சித்தது இல்லை. ஆனால் 4 ஜனாதிபதி, 3 பிரதமர், ஆயிரம் எம்.எல்.ஏ., 300 எம்.பி.க்கள் என பல அமைச்சர்களை உருவாக்கிய தலைவர் கருணாநிதியை அமைச்சர் விஜயபாஸ்கர் விமர்சித்துள்ளார். அவருக்கு வரும் தேர்தலில் தக்க பாடம் புகட்ட வேண்டும் என பேசினார். ஜோதிமணி எம்.பி. பேசுகையில், 10 ஆண்டு காலமாக இருளில் உள்ள தமிழகத்தை மீட்டெடுக்க மு.க.ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என்றார். லியோனி பேசுகையில், அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க., புதிய தமிழகம் போன்ற கட்சிகள் விலகியதால் ஆயுதம் இழந்த வீரனாக எடப்பாடி பழனிசாமி நின்று கொண்டிருக்கிறார். வரும் தேர்தலில் இந்த தொகுதியில் பழனியப்பன் வெற்றி பெறுவார் என்றார். இதில், தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்