தூத்துக்குடி,
வ.உ.சி. துறைமுக பொறுப்புக்கழக தலைவர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தூத்துக்குடி வ.உ.சி துறைமுகம் சரக்கு கையாளுவதில் கூடுதலாக முதன் முறையாக கந்தக அமிலத்தை இறக்குமதி செய்து உள்ளது.
தூத்துக்குடியை சேர்ந்த ஒரு நிறுவனத்துக்கு அமி என்ற கப்பலில் 18 ஆயிரத்து 965 மெட்ரிக் டன் கந்தக அமிலம் வ.உ.சி. துறைமுகத்துக்கு வந்தது. இந்த அமிலம் திறம்பட கையாளப்பட்டு சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்த சாதனையை படைக்க காரணமாக இருந்த அனைத்து துறைமுக உபயோகிப்பாளர்கள், கப்பல் முகவர்கள், அனைத்து அதிகாரிகள், ஊழியர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.இனி வரும் காலங்களில் இது போன்ற பல சாதனைகளை புரிய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.