மாவட்ட செய்திகள்

குக்கரை தலையில் சுமந்தபடி சசிகலாவை வரவேற்க மொபட்டில் சென்னை செல்லும் தொண்டர்

குக்கரை தலையில் சுமந்தபடி சசிகலாவை வரவேற்க மொபட்டில் தொண்டர் ஒருவர் சென்னை செல்கிறார்.

திருச்சி,

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியை சேர்ந்தவர் சைக்கிள் வடிவேல் (வயது 56). புரோட்டா மாஸ்டரான இவர் அ.ம.மு.க.வில் எம்.ஜி.ஆர்.மன்ற துணை செயலாளராக இருந்து வருகிறார்.

நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் அ.ம.மு.க.வுக்கு குக்கர் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. இதையடுத்து சைக்கிள் வடிவேல் கட்சி சின்னமான குக்கரை தொப்பி போல் தலையில் அணிந்தபடி அ.ம.மு.க. கொடியுடன் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு திருச்செங்கோட்டில் இருந்து மொபட்டில் பல்வேறு மாவட்டங்களுக்கு பிரசார சுற்றுப்பயணத்தை தொடங்கினார். தொடர்ந்து சேலம், விழுப்புரம், தர்மபுரி, ஓசூர் போன்ற இடங்களுக்கு மொபட்டிலேயே சென்று விட்டு, நேற்று காலை அவர் திருச்சி வந்தார்.

இதையடுத்து திருச்சியில் இருந்து சென்னை செல்வதாகவும், 8-ந் தேதி தமிழகம் வரும் சசிகலாவை வரவேற்க திரளும் ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் தானும் கலந்து கொள்ள இருப்பதாகவும் கூறினார். இதைத்தொடர்ந்து திருச்சியில் இருந்து பெரம்பலூர் சென்றார். பின்னர் அங்கிருந்து தனது பயணத்தை தொடர்ந்தார்.

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு