மாவட்ட செய்திகள்

80 வயதுக்கு மேற்பட்டவர்கள் தபால் மூலம் வாக்களிக்க வரும் 16-ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்

80 வயதுக்கு மேற்பட்டவர்கள் தபால் மூலம் வாக்களிக்க வரும் 16-ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் தேர்தல் அதிகாரி அறிவிப்பு.

சென்னை,

சென்னை மாவட்டத்தில் உள்ள 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் தபால் மூலம் வாக்குகள் செலுத்த வரும் 16-ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட தேர்தல் அதிகாரி கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

சென்னை மாவட்டத்தில் நேரில் சென்று வாக்களிக்க முடியாத 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட அல்லது பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் உள்ளவர்கள் தங்களது வாக்குகளை தபால் மூலம் செலுத்தலாம். அவ்வாறு செலுத்த விருப்பம் உள்ளவர்கள் சம்பந்தப்பட்ட சட்டமன்ற தொகுதியின் தேர்தல் நடத்தும் அதிகாரிக்கு, சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர் மூலம் 12-டி படிவத்தை பூர்த்தி செய்து வரும் 16-ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இந்த படிவங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலர் நேரில் சென்று பெற்று தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் அளிப்பார். இந்த படிவம் பெற 5 நாட்களுக்குள் இரு முறை மட்டுமே வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடுகளுக்கு வருவார்கள். அப்போது மாற்றுத்திறனாளிகள் என்பதற்கான அரசு சான்றிதழை மாற்றுத்திறனாளிகள் வழங்க வேண்டும். கொரோனா தொற்றால் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் சுகாதார அதிகாரியிடம் இருந்து பெறப்பட்ட சான்றிதழ் வழங்க வேண்டும். இந்த படிவங்கள் பரிசீலனை செய்யப்பட்டு, தபால் மூலம் வாக்களிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு