செந்துறை,
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் சட்டமன்ற தொகுதிக் குட்பட்ட பஞ்சயம்பட்டி கிராமத்தில் அ.தி.மு.க வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான நத்தம் விசுவநாதன் அங்குள்ள முத்துமாரியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு திறந்த ஜீப்பில் நின்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். தொ டர்ந்து அரவங்குறிச்சி பகுதி யில் அவர் பேசியதாவது:-
நத்தம் ஒன்றிய குழு தலைவராக 1986ல் உங்கள் ஆதரவுடன் வெற்றி பெற் றேன். முதன் முதலில் வெற்றி பெற்றதற்கு நீங்களே காரணம், மேலும் நத்தம் தொகுதிக்கு ஆயிரம் கோடிக்கு மேல் வளர்ச்சி திட்ட பணிகள் செய்து முடிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இப்பகுதி மக்களின் நலன் கருதி தொடர்ந்து மக்கள் பணி யாற்ற மீண்டும் சட்டமன்ற உறுப்பினர் பதவிக்காக போட்டியிடுகிறேன். எனக்கு ஏற்கனவே 4 முறை வாக்களித்து வெற்றி பெற செய்துள்ளீர்கள். 5 வது முறையும் என்னை வெற்றி பெற செய்து. இந்த தொகுதி யின் வளர்ச்சிக்காக பாடுபட வாய்ப்பு தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
தி.மு.க ஆட்சிக்கு வருவதை மக்கள் யாரும் விரும்பவில்லை. அ.தி.மு.க. ஆட்சியையே மக்கள் விரும்புகின்றனர். நீங்கள் ஒரு நாளைக்கு இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்தால் 5 வருடங் களுக்கு அதற்கான பலனை அனுபவிக்கலாம். நல்லாட்சி தொடர்ந்து, மக்கள் மகிழ்ச்சி யுடன் வாழ இரட்டை இலைக்கு வாக்களியுங்கள் என்றார்.
தமிழக மக்களின் நலன் கருதி 2 ஆயிரம் மினி கிளினிக்குகள் திறக்கப்பட் டுள்ளன. இதன் மூலம் கிராமப்புற மக்கள் பயன் பெறுவர். மக்கள் நலன் கருதி தேர்தல் அறிக்கை தயாரிக்க பட்டுள்ளது. மகளிர்க்காக அம்மா ஸ்கூட்டர் வழங்கும் திட்டம் விரிவுபடுத்த பட்டுள்ளது. நீங்கள் எல்லாம் எனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெற செய்யுமாறு உங்கள் வீட்டு பிள்ளையாய் கேட்டுகொள் கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து ஒத்தினிபட்டி, லட்சுமணபுரம், அய்யனார் புரம், இ.வேலூர், அரவங் குறிச்சி, சொறிப்பாறைபட்டி, எர்ரம்பட்டி, சிரங்காட்டு பட்டி, மங்களப்பட்டி, கம்பிளி யம்பட்டி,கோசு குறிச்சி, கருத்தலக்கம்பட்டி, நல்லூர், சின்னையம்பட்டி, கோட்டை யூர் உள்ளிட்ட கிராம பகுதி களிலும் நத்தம் விசுவநாதன் பிரசாரம் செய்தார்.
பிரசாரத்தின் போது நத்தம் ஒன்றிய குழு தலைவர் கண்ணன், வடக்கு ஒன்றிய செயலாளர் சின்னு, மாவட்ட ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் ஜெயபாலன், மாவட்ட மாணவரணி இணை செயலாளர் அசாரு தீன், மாவட்ட கவுன்சிலர் சின்னாக்கவுண்டர், ஊராட்சி மன்ற தலைவர்கள் சுப்பிரமணியன், சவரி முத்து, அழகம்மாள்மணி, ஆண்டிச் சாமி,ஒன்றிய கவுன்சிலர்கள் சத்தியமூர்த்தி, முருகேஸ்வரி குமார், சார்லஸ், செல்வ ராஜ், உலுப்பகுடி பால் பண்ணை தலைவர் சக்தி வேல், தெற்கு ஒன்றிய பொருளாளர் வாசு தேவன், மாவட்ட விவசாய அணி இணைச் செயலாளர் ராஜேந்திரன், வர்த்தக அணி துணைத் தலைவர் வேலுச் சாமி, வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவர் ஆரோக்கிய சாமி, தொழில்நுட்ப பிரிவு ஒன்றிய செயலாளர் ராஜா, தொழில்நுட்ப பிரிவு ஊராட்சி செயலாளர் நெல்சன், நகர் எம்.ஜி.ஆர் .மன்ற செயலாளர் கருப்பையா உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.