மாவட்ட செய்திகள்

நொய்யல் அருகே குழாயில் உடைப்பு ஏற்பட்டு வீணாகும் குடிநீர்; நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

நொய்யல் அருகே குழாயில் உடைப்பு ஏற்பட்டு வீணாகும் குடிநீர் குறித்து நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

நொய்யல்,

கரூர் மாவட்டம், நொய்யல் அருகே மரவாபாளையத்திலிருந்து குப்பத்திற்கு செல்லும் தார்சாலை வழியாக காவிரி ஆற்றிலிருந்து அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி, பரமத்தி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 564 குடியிருப்புகள் மற்றும் பள்ளப்பட்டி, அரவகுறிச்சி, பேரூராட்சி பகுதிகளுக்கு காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு, குடிநீர் குழாய் மூலம் தண்ணீர் செல்கிறது. இந்நிலையில் மரவாபாளையம் காவிரி ஆற்றிலிருந்து செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகிறது. இதுகுறித்து குடிநீர் வடிகால்வாரிய அதிகாரிகளிடமும், உள்ளாட்சி துறை அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் தொடர்ந்து குழாயிலிருந்து குடிநீர் வெளியேறி வருகிறது.

இதனால் அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி மற்றும் பரமத்தி சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வினியோகம் செய்ய முடியாததால், அப்பகுதி பொதுமக்கள் குடிநீருக்கு அவதியுற்று வருகின்றனர். எனவே குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து, வீணாக வெளியேறும் குடிநீர் குழாயை சீரமைக்க வேண்டும் என வேட்டமங்கலம் மற்றும் குந்தானிபாளையம், நத்தமேடு பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்