மாவட்ட செய்திகள்

திசையன்விளை, இட்டமொழி பகுதி குளங்களுக்கு மணிமுத்தாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும்; கலெக்டரிடம் விவசாயிகள் மனு

திசையன்விளை, இட்டமொழி பகுதி குளங்களுக்கு மணிமுத்தாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று கலெக்டரிடம் விவசாயிகள் மனு கொடுத்தனர்.

தினத்தந்தி

கலெக்டரிடம் மனு

திசையன்விளை, இட்டமொழி பகுதி பொதுமக்கள் நம்பித்துரை என்பவர் தலைமையில் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

திசையன்விளை தாலுகா இட்டமொழி, சுவிசேஷபுரம், திசையன்விளை, ஆனைகுடி கிராமங்களைச் சுற்றியுள்ள 100 கிராம மக்கள் நிலத்தடி நீர் இல்லாமல், குடிநீர் இன்றி தவித்து வரும் சூழ்நிலையில் மணிமுத்தாறு அணையில் உபரிநீர் கடலில் திறந்து விடப்பட்டு வந்தது. அணையில் தற்போது 118 அடி தண்ணீர் இருந்து வருகிறது. அப்படி தண்ணீர் இருந்தும் இந்த பகுதியில் உள்ள 100 கிராம மக்கள் குடிநீர் இல்லாமல் தவித்து வருகிறார்கள்.

மணிமுத்தாறு அணையில் இருந்து...

எனவே இந்த கிராமங்களில் குடிநீர் பிரச்சினையை தீர்க்கும் வகையில் இட்டமொழி, சுப்பிரமணியபுரம், சுவிசேஷபுரம், அந்தோணியார்புரம் குளங்களுக்கும், ஆயன்குளம் படுகை, எருமைகுளம் படுகை, ஆனைகுடி படுகை, முதுமொத்தன்மொழி படுகை, கடகுளம் படுகை ஆகிய பகுதிகளுக்கும் மணிமுத்தாறு அணை தண்ணீரை திறந்துவிட்டு நிலத்தடி நீரை பெருகச் செய்து குடிநீர் பிரச்சினையை தீர்க்க ஆவன செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்