மாவட்ட செய்திகள்

ஸ்கூட்டி மீது தண்ணீர் டேங்கர் லாரி மோதியது தனியார் நிறுவன பெண் ஊழியா சாவு

மாகிமில் ஸ்கூட்டி மீது தண்ணீர் டேங்கர் லாரி மோதிய விபத்தில் தனியார் நிறுவன பெண் ஊழியா பரிதாபமாக உயிரிழந்தார்.

தினத்தந்தி

மும்பை,

மும்பை லோயர் பரேல் என்.எம்.ஜோஷிமார்க் பகுதியை சேர்ந்த பெண் தர்மிஸ்டா ஈஸ்வர் லால்(வயது28). இவர் வெர்சோவாவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். நேற்று காலை 10 மணியளவில் தனது ஸ்கூட்டியில் வேலைக்கு சென்று கொண்டு இருந்தார்.

மாகிம் பகுதியில் வந்தபோது, பின்னால் வேகமாக வந்த தண்ணீர் டேங்கர் லாரி ஒன்று அவரது ஸ்கூட்டி மீது பலமாக மோதியது. இதில், ஸ்கூட்டியுடன் கீழே விழுந்த தர்மிஸ்டா ஈஸ்வர் லால் தண்ணீர் டேங்கர் லாரியின் பின்பக்க சக்கரத்தில் சிக்கினார்.

இதில், உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் துடித்த அவரை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக பாந்திரா பாபா ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தண்ணீர் டேங்கர் லாரி டிரைவர் ராம்பால் (35) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது