மாவட்ட செய்திகள்

கோபி அருகே குண்டேரிப்பள்ளம் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு

கோபி அருகே குண்டேரிப்பள்ளம் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

டி.என்.பாளையம்,

கோபி அருகே குண்டேரிப்பள்ளம் அணை உள்ளது. இந்த அணையின் மொத்த நீர்மட்டம் 42 அடியாகும். தற்போது அணையின் நீர்மட்டம் 27 அடியாக உள்ளது. இந்த அணையின் மூலம் கொங்கர்பாளையம், அரக்கன்கோட்டை, வாணிப்புத்தூர், புஞ்சைதுறையம்பாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள 2 ஆயிரத்து 488 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது.

இந்த நிலையில் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து குண்டேரிப்பள்ளம் அணையில் இருந்து தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது.

இதையொட்டி உதவி செயற்பொறியாளர் கல்பனா சுந்தர் அணையில் உள்ள மதகை இயக்கி தண்ணீரை திறந்து விட்டார். அணையின் வலது கரை மற்றும் இடது கரையில் என மொத்தம் வினாடிக்கு 28 கனஅடி நீர் வெளியேறுகிறது. நேற்று காலை அணையின் நீர்மட்டம் 27 அடியாக இருந்தது. இதில் அரசு அதிகாரிகள், விவசாயிகள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், குண்டேரிப்பள்ளம் அணையில் இருந்து பாசனத்துக்கு இன்று (நேற்று) தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. வருகிற 8-ந்தேதி வரை தண்ணீர் திறக்கப்படும். எனவே விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்றனர்.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு