மாவட்ட செய்திகள்

நாமக்கல் மாவட்டத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இல்லை

நாமக்கல் மாவட்டத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பில்லை என வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்து உள்ளது.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (சனிக்கிழமை) முதல் 4 நாட்களுக்கு நிலவும் வானிலை குறித்து கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

இன்று முதல் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இல்லை. இன்று முதல் 4 நாட்களுக்கு மணிக்கு 6 கி.மீட்டர் வேகத்தில் வடகிழக்கு திசையில் இருந்து காற்று வீசும். வெப்பநிலையை பொறுத்தவரையில் அதிகபட்சமாக 91.4 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 64.4 டிகிரியாகவும் இருக்கும். காற்றின் ஈரப்பதம் அதிகபட்சமாக 80 சதவீதமாகவும், குறைந்தபட்சமாக 25 சதவீதமாகவும் இருக்கும்.

நாமக்கல் மாவட்டத்தில் அடுத்த 4 நாட்களுக்கு வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு, மழை பெய்ய வாய்ப்பில்லை. தற்போது பகல் நேரங்களில் வெப்பநிலை உயர்ந்தும், அதிகாலையில் வெப்பநிலை குறைந்தும் காணப்படுவதால் கோழிகள் வெப்ப அயற்சிக்கு ஆளாக வாய்ப்பு உள்ளது. எனவே பண்ணையாளர்கள் நச்சுயிரி தாக்குதல் வராமல் தடுக்க தகுந்த உயிர் பாதுகாப்பு முறைகளை கையாள்வதோடு, கிருமிநாசினியை தெளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.,

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு