மாவட்ட செய்திகள்

கிணற்றில் பிணமாக கிடந்த இளம்பெண் போலீஸ் விசாரணை

திருவண்ணாமலை அருகே உள்ள வெறையூர் தென்மாத்தூர் பகுதியை சேர்ந்தவர் சேகர், விவசாயி. இவரது மகள் அஞ்சு என்கிற அஞ்சலை (வயது 20). வெறையூர் அருகே கிணற்றில் பிணமாக கிடந்தார்.

வாணாபுரம்,

இவர், கடந்த 4-ந் தேதி துணி துவைப்பதற்காக அந்த பகுதியில் உள்ள விவசாய கிணற்றிற்கு சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அஞ்சலையை அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் அந்த பகுதியை சேர்ந்த முனியன் என்பவர் அந்த பகுதியில் உள்ள கிணற்றில் குளிக்க சென்றார். அப்போது கிணற்றில் இளம் பெண்ணின் பிணம் மிதப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பிணத்தை கிணற்றில் இருந்து மீட்டு பார்த்தபோது அஞ்சலை என்பது தெரியவந்தது. அஞ்சலையின் உடலை கண்டு அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் வெறையூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, அஞ்சலையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கிணற்றில் தவறி விழுந்து இறந்தாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்