மாவட்ட செய்திகள்

கடற்கரையில் கொலை செய்யப்பட்டு கிடந்தவர் யார்? துப்பு துலக்க முடியாமல் போலீசார் திணறல்

திருச்செந்தூரில் அடையாளம் தெரியாத நபர் கழுத்தை அறுத்துக் கொலை செய்யப்பட்டார். இதில் இறந்த நபர் யாரென்று தெரியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

தினத்தந்தி

திருச்செந்தூர்,

திருச்செந்தூர் தோப்பூர் கல்லறை தோட்டத்தின் கிழக்கு பகுதியில் கடற்கரையில் கடந்த 23-ந்தேதி காலையில் 50 வயது மதிக்கக்கத்த ஆண் பிணம் கரை ஒதுங்கியது. இதுகுறித்து அப்பகுதியினர் திருச்செந்தூர் தாலுகா போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். அப்போது இறந்து கிடந்த நபர் வெள்ளை நிற பனியன், சிவப்பு நிற சட்டை, கையில் சுமார் ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள கேஷியோ கம்பெனி கை கடிகாரம் அணிந்து இருந்தார். அவரது கழுத்தில் ஆழமான வெட்டுக்காயம் இருந்தது. முதல்கட்ட விசாரணையில் அவரை மர்மநபர்கள் கழுத்தை அறுத்துக் கொலை செய்தது தெரிய வந்தது.

கொலை செய்யப்பட்ட நபரின் உடல் பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சம்பவம் நடந்து ஒரு வாரம் ஆன நிலையில் இறந்தவர் யாரென்று அடையாளம் தெரியாததால் போலீசார் திணறி வருகின்றனர். இதனால் இறந்தவர் உடல், பரிசோதனை செய்யப்படாமல் ஆஸ்பத்திரியிலேயே பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளது. இன்ஸ்பெக்டர் ரகுராஜன் தலைமையிலான போலீசார், மாவட்டம் முழுவதும் காணாமல் போன நபர்கள் பற்றிய விவரங்களை சேகரித்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்