மாவட்ட செய்திகள்

மாவட்டத்தில் பரவலாக மழை தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது

கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது.

கடலூர்,

வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் தொடங்கி பெய்து வருகிறது. இந்த மழை மேலும் 10 நாட்களுக்கு நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் காற்றின் திசை வேக மாறுபாடு காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தது.

கடலூரை பொறுத்தவரை நேற்று காலை மழைக்கு 82 சதவீத வாய்ப்பு உள்ளதாகவும், இன்று (திங்கட்கிழமை) மழைக்கு வாய்ப்பு இல்லை. இருப்பினும் நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் பொங்கல் பண்டிகை வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மழைநீர் தேங்கியது

இதன்படி கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் விட்டு, விட்டு மழை பெய்தது. இந்த மழை நேற்றும் நீடித்தது. சில நேரங்களில் மழை ஓய்ந்தும், பின்னர் மழை விட்டு, விட்டு பெய்த வண்ணம் இருந்தது. இருப்பினும் இந்த மழையால் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது. வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துடன் சென்றனர். சிலர் குடைபிடித்தபடியும், மழை கோட்டு அணிந்தபடியும் சென்றனர். இதேபோல் சிதம்பரம், வானமாதேவி, விருத்தாசலம், அண்ணாமலைநகர், குறிஞ்சிப்பாடி, பரங்கிப்பேட்டை, லால்பேட்டை, காட்டுமன்னார்கோவில், ஸ்ரீமுஷ்ணம் என மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்தது.

மழை அளவு

இருப்பினும் நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சிதம்பரத்தில் 10 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. குறைந்தபட்சமாக புவனகிரி, கீழசெருவாயில் தலா 1 மில்லி மீட்டர் மழை பதிவாகியது. மாவட்டத்தில் சராசரியாக 3.74 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு