மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி மனைவி பலி: கணவன் படுகாயம்

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் மனைவி பரிதாபமாக இறந்தார். கணவன் படுகாயமடைந்தார்.

நொய்யல்,

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அருகே கு.அய்யம்பாளையத்தை சேர்ந்தவர் முருகேசன்(வயது 55). இவர் நேற்று மாலை தனது மனைவி பூங்கொடியுடன்(45) ஒரு மோட்டார் சைக்கிளில் கரூரில் உள்ள ஒரு நகைக்கடைக்கு வந்தார். நகைகள் வாங்கிய பின்னர் அவர்கள் ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர்.

தவுட்டுப்பாளையத்தை அடுத்துள்ள ஒரு ஓட்டல் அருகே வந்தபோது, கரூரில் இருந்து சேலம் நோக்கி சென்ற லாரி, அவர்களுடைய மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டனர். இதில் பலத்த காயமடைந்த பூங்கொடி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

முருகேசன் பலத்த காயமடைந்தார். அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து தகவல் அறிந்த வேலாயுதம்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பூங்கொடியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயராமன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு